வாருங்கள் மனிதர்களே! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! – கவிப்பேரரசு வைரமுத்து
Contact us to Add Your Business
மழைப் பிரசங்கம்!
யாரங்கே?
வாருங்கள்!
வருந்திப்பாராம்
சுமக்கிறவர்களே
வாருங்கள்!
வாழ்க்கையை
வயிற்றுக்கு
விற்றுவிட்டவர்களே
வாருங்கள்!
கால்களின்
எண்ணிக்கையால் மட்டும்
விலங்கினின்றும்
வித்தியாசப்பட்டவர்களே
வாருங்கள்!
விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்!
திரவ முத்துக்கள்
தெறிப்பதை பாருங்கள்!
யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்!
மழை! மழை! மழை!
மழை! மழை! மழை!
மண்ணின் அதிசயம் மழை!
பூமியை வானம்
புணரும் கலை மழை!
சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை!
அதோ பாருங்கள்
தாவரங்களுக்கு
ரத்ததானம் நிகழ்கிறது!
இதோ பாருங்கள்
மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொரு இலையிலும்
உயிர் சோம்பல் முறிக்கிறது!
இது என்ன?
மழையை இந்த மண்
வாசனை அனுப்பி
வரவேற்கிறதா?
அங்கே பாருங்கள்
பள்ளிக்கூடம் விட்ட
குழந்தைகளாய்
மழைத் தாரைகள்!
அதோ! அதோ!
பூமியின் மர்மங்கள்
நனைக்கின்றன!
சரிதான்
பூமிக்கு அடிக்கடி
புனித நீராட்டு விழாவா?
வாருங்கள் மனிதர்களே
சிந்தும் மழையோடு
சிநேகமாவோம்!
மழையில் தெப்பமாவோம்!
– #கவிப்பேரரசு #வைரமுத்து
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates